எண்டோமெட்ரியோசிஸ்‌ மற்றும்‌ தாமதமாக கருவுறுதல்‌.

                இடுப்பு குழியில்‌ அழற்சியை ஏற்படுத்தும்‌ என்டோமெட்ரியோசிஸ்‌ பெண்களின்‌ குழந்தை பிறப்பை தாமதப்படுத்தும்‌ பல காரணங்களில்‌ ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள்‌ மருத்துவமைனக்கு வரும்‌ பல பெனர்கள்‌ இந்த நிலை காரணமாக குழந்தை பேறு தாமதமாகி மன வேதனை அடைந்தாலும்‌ இந்த நோயால்‌ குழந்தை பேறு தாமதமடைந்தாலும்‌ விரைவான மற்றும்‌ சரியான சிகிச்சை மூலம்‌ அத்தகையவர்கள்‌ தங்கள்‌ குழந்தை கனவை நனவாக்கிக்‌ கொள்ள முடியும்‌.

இந்த நோயால்‌ பாதிக்கப்பட்ட

என்டோமெட்ரியம்‌ என்பது கர்ப்பப்பையின்‌ உள்‌ அடுக்கிற்கு வழங்கப்படும்‌ பெயராகும்‌. இந்த அடூக்கானது குறிப்பிட்ட சில வகையான செல்களை கொண்டுள்ளது என்டோமெட்ரியோஸில்‌ இந்த சிறப்பு செல்கள்‌ கர்ப்பப்பைக்கு வெளியே சில இடங்களில்‌ வளரும்‌. அதனால்‌ அந்த இடங்களில்‌ வீக்கம்‌ ஏற்படுகின்றது மற்றும்‌ இடமகல்‌ கர்ப்பப்பை அகப்படலத்தில்‌ குறிப்பாக இடுப்புக்‌ குழியில்‌ உள்‌ உறுப்பு அழற்சி நிலைமைகள்‌ காரணமாக ஒன்றாக ஒட்டிக்கொள்ளலாம்‌. இது உறைந்த இடுப்பு என்று அழைக்கப்படுகின்றது.

என்டோமெட்ரியோஸின்‌ அறிகுறிகள்‌ என்ன?

இந்த நோயால்‌ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த அறிகுறியும்‌ இருக்காது. ஆனால்‌ பலர்‌ அடிவயிற்றின்‌ கீ பகுதியில்‌ வலியை கண்டறிய முடியும்‌. இந்த வலி மாதாவிடாய்‌ காலத்திற்கு முன்பும்‌ அல்லது மாதாவிடாய்‌ காலத்திற்கும்‌ இடையிலும்‌ ஏற்படலாம்‌. கணவருடன்‌ உடலுறவு, சிறுநீர்க்கழித்தல்‌ மற்றும்‌ மலம்‌ கழிக்கும்‌ போதும்‌ வலி ஏற்படலாம்‌. தாமதமான கர்ப்பம்‌ மற்றும்‌ கர்ப்பப்பையின்‌ அசாதாரண வளர்ச்சி என்பவை இதன்‌ அறிகுறிகளாகும்‌.

என்டோமெட்ரியோஸிஸை கண்டறிய என்ன சோதனைகள்‌ உள்ளன?

உங்கள்‌ அறிகுறிகள்‌ மற்றும்‌ ஸ்கேன்களின்‌ அடிப்படையில்‌ உங்கள்‌ மருத்துவர்‌ உங்களுக்கு என்டோமெட்ரியோஸிஸ்‌ இருப்பதாக சந்தேகித்தால்‌ அதை உறுதியாக உறுதிப்படுத்த லெப்ரோஸ்கொப்பி அல்லது திறந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்‌.

என்டோமெட்ரியோஸிஸிற்கான சிகிச்சைகள்‌ என்ன?
• சிகிச்சையின்‌ வகை உங்களின்‌ அறிகுறிகளை பொறுத்தது. வலிக்கு வலி நிவாரணிகள்‌ பரிந்துரைக்பப்படுகின்றன. மற்றும்‌ ஹோர்மோன்‌ மாத்திரைகள்‌, கருப்பபையக சாதனம்‌ (IUD), ஊசி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு லேப்ரோஸ்கொப்பி அறுவை சிகிச்சை. இதில்‌ ஒரு சிறிய கேமரா வயிற்றுக்குழிக்குள்‌ செருகப்பட்டு, அழற்சி நிலைமைகளை கண்டறிந்து அகற்ற பயன்படுகின்றது. என்டோமெட்ரியோசிஸ்‌ காரணமாக நீங்கள்‌ கருவுறுவது தாமதடைந்தால்‌ என்ன செய்ய வேண்டும்‌? உங்கள்‌ மருத்துவரை ஆலோசித்து பொருத்தமான சிகிச்சை முறையை பின்பற்றுவது அவசியம்‌. ஆரம்பத்தில்‌ இடுப்பு அழற்சி நோயால்‌ (லெப்ரோஸ்கொப்பிக்‌ அடிசியோலிசிஸ்‌) ஏற்படும்‌ ஒட்டூதல்களை அகற்ற லெப்ரோஸ்கொப்பி அறுவை சிகிச்சை பயன்படூத்தப்படலாம்‌. மேலும்‌ இந்த ஒட்டூதல்களை Gn RH Analogues என்ற. ஹோர்மோன்‌ மருந்தை ஊசி மூலம்‌ பெறுவதன்‌ மூலமும்‌ அகற்றலாம்‌. அத்தகைய பெனர்களுக்கு இயற்கையான உடலுறவை விட, செயற்கை கருவூட்டல்‌ (IUI) சிகிச்சை சிறந்த முறையாகும்‌. பல பெனர்கள்‌ கருப்பையை சுற்றியுள்ள ஒட்டூதல்களை லெப்ரோஸ்கொப்பி மூலம்‌ அகற்றி, மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விட்டு, இயற்கையான உடலுறவை சார்ந்து பல மாதங்கள்‌ காத்திருக்கின்றனர்‌. இதன்‌ போது, இந்த ஒட்டூதல்கள்‌ காலப்போக்கில்‌ மீண்டும்‌ அதிகரிக்கும்‌ மற்றும்‌ கர்ப்பம்‌ மீண்டும்‌ தோல்வியடையும்‌. எனவே, லெப்ரோஸ்கொப்பிக்‌ அறுவை சிகிச்சைக்கு பின்னர்‌ உடனடியாக மருத்துவரை அணுகி IUI சிகிச்சையை பெறுவது மிகவும்‌ நல்லது. மேம்பட்ட என்டோமெட்ரியோசிஸில்‌, முட்டைகளின்‌ கருப்பை இருப்பு குறையலாம்‌. இதன்போது நன்கெடையாளர்‌ முட்டை IVF சிகிச்சை மிகவும்‌ பொருத்தமானதாக இருக்கலாம்‌. எனவே, உங்களுக்கு இந்த அறிகுறிகள்‌ இருந்தால்‌ இனிமேல்‌ குழந்தை பிறப்பதை பற்றி கவலைப்பட வேண்டாம்‌. உடனடியாக உங்கள்‌ மருத்துவரை அணுகவும்‌ மற்றும்‌ சாத்தியமான சிகிச்சை முறைகளைப்‌ பற்றி அறிந்துக்‌ கொள்ளவும்‌. ஏனெனில்‌ இந்த நோயாளிகளில்‌ பலர்‌ குழந்தைச்‌ செல்வத்தைப்பற்றி கூறி வருகின்றனர்‌. எனவே, ஆர்வத்தை கைவிடாமல்‌ இது தொடர்பாக சிகிச்சை பெற்று, உங்களுக்கு அளிக்கப்படும்‌ மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றி விரைவில்‌ குழந்தைபேறு அடைய முயற்சி செய்யுங்கள்‌.
ta_LKTA
Powered by TranslatePress