கர்ப்ப காலத்தில்‌ ஏன்‌ அஸ்பிரின்‌ வழங்கப்படுகின்றது?

கர்ப்ப காலத்தில்‌ பொதுவாக பெண்கள்‌ :.போலிக்‌ அசிட்‌ மாத்திரைகள்‌ இரும்புச்‌ சத்து மாத்திரைகள்‌, கல்சியம்‌ மாத்திரைகள்‌ போன்றவற்றை எடுக்க வேண்டும்‌ ஆனால்‌ சில சிறப்பு சந்தர்ப்பங்களில்‌ மட்டூம்‌, பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும்‌ இந்த மாத்திரைகளை தவிர மற்ற மருந்துகளையும்‌ மருத்துவர்‌ பரிந்துரைக்க முடியும்‌. அத்தகைய மருந்துகளில்‌ ஒன்றே அஸ்பிரின்‌ ஆகும்‌. NSAID களின்‌ வகையை சேர்ந்த அஸ்பிரின்‌ இரத்தம்‌ உறைவதைக்‌ குறைக்க பொதுவாக வழங்கப்படும்‌ ஒரு மருந்து (Anti Platelet).

கர்ப்ப காலத்தில்‌ அஸ்பிரின்‌ வழங்கப்படும்‌ சிறப்பு சந்தர்ப்பங்கள்‌

• உ கர்ப்ப காலத்தில்‌ உயர்‌ இரத்த அழுத்தம்‌ ப்ரீ எக்லாம்ப்ஸியாவாக (கர்ப்ப கால உயர்‌ இரத்த அழுத்தம்‌) உருவாகாமல்‌ தடுக்க.

• அடிக்கடி கருச்சதைவு ஏற்படுவதை தடுக்க

• கீழ்வாதம்‌ மற்றும்‌ தன்னுடல்‌ தாக்க நோய்கள்‌ உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு,

• நீரிழிவு மற்றும்‌ பருமனான பெனர்கள்‌

• இரட்டைக்‌ கருவுற்றிருக்கும்‌ பெண்கள்‌ - சிறுநீரக நோயால்‌

வயதான தாய்வழி கர்ப்பங்கள்‌ (35 வயதிற்கு மேல்‌) உ. மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்‌ அஸ்பிரின்‌ வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவரே தீர்மானிப்பார்‌. அஸ்பிரின்‌ கர்ப்ப காலத்தில்‌ வழங்குவதற்கு உகந்த மருந்து. மருத்துவரின்‌ அனுமதியுடன்‌ பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில்‌ பரிந்துரைக்கப்பட்ட அளவில்‌ எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்‌. இது தாயின்‌ வயிற்றில்‌ வளரும்‌ குழந்தை மற்றும்‌ தாயின்‌ சிக்கல்களை குறைக்கும்‌.

ta_LKTA
Powered by TranslatePress