ஒரு ஆணின்‌ விந்தணு எண்ணிக்கை கருவுறுதலை எவ்வாறு பாதிக்கின்றது?

• பொதுவாக உடலுறவின்‌ போது ஆளர்களால்‌ வெளியேற்றப்படூம்‌ விந்தணுக்களின்‌ எண்ணிக்கை 15 மில்லியனுக்கு அதிகமாக இருத்தல்‌ வேண்டும்‌. அதை விட குறைவாக இருந்தால்‌ அது நேரடியாக கருவுறுதலை பாதிக்கும்‌.

இதற்கு பல்வேறு காரணங்கள்‌ உள்ளன.

1. மாதிரி பரிசோதனை போத்தலில்‌ முழுமையடையாத விந்தணு சேகரிப்பு

2. அனோர்காஸ்மியா (Anorgasmia)

3. ஒரு மனிதனுக்கு வழங்கப்படும்‌ பல்வேறு வகையிலான மருந்துகள்‌

4. நரம்பியல்‌ நிலைமைகள்‌ மற்றும்‌ முதுகெழும்பு காயம்‌.

5. நீரிழிவு நோய்‌

6. சிறுநீர்ப்பறயின்‌ கழுத்துப்பகுதியில்‌ மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள்‌ செமினல்‌ வெசிகல்ஸ்‌ எனப்படும்‌ சுரப்பிகள்‌ விந்தணுப்‌ பாதையில்‌ உள்ள சுரப்பிகளின்‌ குழாய்களில்‌ ஏற்படும்‌ தடைகள்‌ விந்தணுக்களின்‌ திரவத்தன்மைக்கு காரணமாகின்றன.

முள்ளந்தண்டு மற்றும்‌ நரம்பு மண்டலத்தில்‌ பிரச்சினைகள்‌ உள்ள சிலரின்‌ விந்தணுக்கள்‌ ஆண்குறியில்‌ இருந்து வெளியே வராமல்‌, மீண்டும்‌ சிறுநீர்ப்பைக்குள்‌ நுழைவதை நாம்‌ பல முறை பார்த்திருப்போம்‌. குறிப்பாக விபத்துக்களில்‌ சிக்கிய ஆண்களுக்கு விந்து வெளியேறும்‌ விந்தணுக்களின்‌ எண்ணிக்கை குறைவதை காணும்‌ போது அவரது விந்தணு மீண்டும்‌ உள்ளே நகர்வதை பரிசோதனை முடிவுகள்‌ உறுதி செய்துள்ளன. விந்தணுவை வெளியேற்ற முயற்சித்த பிறகு பெறப்படும்‌ சிறுநீர்‌ மாதிரியினை விந்தணுக்களுக்கான பரிசோதனை மேற்கொள்வதன்‌ மூலம்‌ அதைப்‌ பற்றி அறியலாம்‌. இத்தகைய சூழ்நிலைகளில்‌ விந்தணுக்களின்‌ எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு மகப்பேறு தொடர்பான விசேட மருத்துவரிடம்‌ தொடர்ச்சியான சிகிச்சையினை பெறுவது மிகவும்‌ முக்கியம்‌. காரணங்களை சரியாக புரிந்துக்‌ கொள்வது மற்றும்‌ சரியான சிகிச்சைகளை பெறுவது மிகவும்‌ அவசியமானதாகும்‌. விசேட மருத்துவ நிபுணர்‌ ரொஹான்‌ லியனகே.

ta_LKTA
Powered by TranslatePress