எஸ்‌ வாஷ்‌ சிகிச்சைகள்‌

இலங்கையில்‌ முதன்‌ முறையாக கர்ப்பப்பை வாய்‌ அடைப்பை நீக்கி, கர்ப்பப்பையை சுத்தப்படுத்தும்‌ S Wash சிகிச்சை.
இங்கே கர்ப்பப்பை வாய்‌ மற்றும்‌ கர்ப்பப்பையானது நுண்ணுயிர்‌ எதிர்ப்பிகளினால்‌ கழுவப்படுகின்றது.

இதன்‌ மூலம்‌;

  • கர்ப்பப்பை வாயில்‌ உள்ள தடைகள்‌ நீங்கி கர்ப்பப்பை சுத்தப்படுத்தபடும்‌.
  • சிகிச்சை மிகவும்‌ குறைந்தளவான நேரத்தினையே எடுக்கும்‌.
  • மயக்கத்தை ஏற்படுத்தாது.

முக்கியத்துவம்
கருத்தரிப்பு தாமதமடையும்‌ நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையின்‌ பின்னர்‌ இயற்கையான கருத்தரிப்பு நிகழ்ந்தமைக்கான பல சான்றுகள்‌ காணப்படுகின்றன.
இதனால்‌ குழந்தையின்மையால்‌ எங்கள்‌ நிறுவனத்திற்கு வரும்‌ நோயாளிகள்‌ மேற்கூறிய அடிப்படை பரிசோதனைகள்‌ மற்றும்‌ சிகிச்சைகள்‌ மூலம்‌ சரி செய்யக்கூடியவாறான குறைபாடுகள்‌ இருந்தால்‌ அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இயற்கையான உடலுறவு மூலம்‌ கருத்தரிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது. அங்கு அவர்களுக்கு, இயற்கையான முறையில்‌ இனச்சேர்க்கை. செயன்முறையை எவ்வாறு சரியாக செய்வது என்பது குறித்து விரிவான ஆலோசனைகள்‌ வழங்கப்படுகின்றன. அந்த ஆரம்ப கட்டங்களில்‌ வெற்றி பெறாத நோயாளிகளுக்கு அடுத்தடுத்த. சிகிச்சைகள்‌ அறிமுகப்படுத்தப்படுகின்றன. இயற்கையான உடலுறவு மூலம்‌ ஒரு, குழந்தையை கருத்தரிப்பதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 5% ஆகும்‌.

ta_LKTA
Powered by TranslatePress